பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க தயாராகும் அவுஸ்திரேலியா

செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில், பலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்க அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுக்க உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இது பலஸ்தீன மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கும், சர்வதேச அரசியல் அமைப்பிலும் முக்கியமான ஒரு முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
எனினும், அவுஸ்திரேலிய அரசின் இந்த முடிவு முக்கிய நிபந்தனையுடன் வந்துள்ளது. அதன்படி, ஹமாஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் எதிர்கால பலஸ்தீன அரசாங்கத்துடன் எந்தவிதமான தொடர்பும் வைத்திருக்கக்கூடாது என்பதே அவுஸ்திரேலியாவின் நிலைப்பாடாகக் கூறப்படுகிறது.
இந்த அறிவிப்புக்குப் பின்னால், அவுஸ்திரேலியா தனது இருநாட்டு தீர்வுக்கான (Two-State Solution) கடைப்பிடிப்பையும், தீவிரவாதத்தைத் தணிக்க வேண்டிய தேவை பற்றிய உறுதிபாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.
பலஸ்தீனத்திற்கு முழுமையான நாட்டுரிமை வழங்கப்படுவது தொடர்பாக சர்வதேச அளவில் பல்வேறு நாடுகள் தொடர்ந்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வரும் நிலையில், அவுஸ்திரேலியாவின் இந்த முடிவு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது.