சீனாவில் கடுமையான வெள்ளம் – குறைந்தது 10 பேர் உயிரிழப்பு, பலர் மாயம்!

சீனாவின் வடமேற்கு கான்சு மாகாணத்தில் உள்ள யுஷோங் கவுண்டியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 33 பேர் காணாமல் போயுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை முதல் பெய்த கனமழையால் லான்சோ நகருக்கு அருகிலுள்ள மலைப்பகுதிகளில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொழிந்த மழையால் ஜிங்லாங் மலைப் பகுதியில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டு, நான்கு கிராமங்களில் 4,000க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவித்தனர்.
யுஷோங் கவுண்டியில் உள்ள மாலியந்தான் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்.
லான்சோ உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை அதிகாலையில் இப்பகுதியில் அதிகபட்ச மழைப்பொழிவு 195 மில்லிமீட்டர் (7.7 அங்குலம்) எட்டியுள்ளது.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் முழு மீட்பு மற்றும் வெள்ளத் தடுப்பு முயற்சிகளை வலியுறுத்தினார்.