ஜெலன்ஸ்கியை சந்தித்ததாலும் சந்திக்காவிட்டாலும் புட்டினைச் சந்திக்க விருப்பம் – டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைச் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்ததாலும் சந்திக்காவிட்டாலும் புட்டினைச் சந்திக்க விரும்புவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அந்தச் சந்திப்பு விரைவில் நடைபெறும் என ரஷ்யாவின் ஜனாதிபதி அலுவலகமான கிரெம்ளின் மாளிகை குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை இன்னமும் அதை உறுதிப்படுத்தவில்லை.
இருதரப்புச் சந்திப்பு ஐக்கிய அரபுச் சிற்றரசில் இடம்பெறலாம் என புட்டின் கோடிகாட்டியிருந்தார்.
சில நிபந்தனைகள் நிறைவேற்றப்படாததால் உக்ரேனிய ஜனாதிபதி ஸெலென்ஸ்கியைச் சந்திக்கத் தயாராக இல்லை என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 7 times, 7 visits today)