அமெரிக்காவில் பல கோடி டொலர்களாக கொட்டப்போகும் வரிப்பணம் – கனவு காண்கிறார் டிரம்ப்!

பல கோடி டொலர்கள் வரியாக அமெரிக்காவுக்கு கொட்டப்போகிறது என ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை இருமடங்காக அதிகரித்து டிரம்ப் இதனை அறிவித்துள்ளார்.
25 சதவீதமாக இருந்த வரி, இனி 50 சதவீதமாக இருக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா மட்டுமின்றி, பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெற்றுள்ள பிரேசிலுக்கும் 50 சதவீதம் வரி விதித்துள்ளார். வேறு பல நாடுகளுக்கும் இவ்வாறான வரிகளை விதித்துள்ளார்.
இந்த புதிய வரி விதிப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று சமூக வலைதளத்தில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவை சிரித்து கொண்டே பல்லாண்டுகளாக பயன்படுத்தி கொண்ட நாடுகளிடம் இருந்து பல கோடி டொலர்கள் வரியாக வந்து கொட்டப் போகின்றன.
இதை அமெரிக்கா தோற்று போக வேண்டும் என்று நினைக்கும் தீவிர இடதுசாரி நீதிமன்றங்களால் மட்டுமே தடுக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.