சாலையை கடக்க வீதியின் குறுக்கே ஓடிய ரோபோ – வைரலாகும் காணொளி!
 
																																		சாலையை கடக்கும் மனித வடிவ ரோபோ பற்றிய வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக வலம் வருகிறது. துபாயின் ‘எமிரேட்ஸ் டவர்’ அருகே உள்ள ஒரு சாலையில் கார் ஒன்று வேகமாக செல்கிறது.
அப்போது காரின் குறுக்கே ரோபோ ஒன்று மிதமான வேகத்தில் ஓடியபடி சாலையைக் கடக்கிறது.சாலையை கடந்த ரோபோ, சட்டென்று நின்று திரும்பி, நடைபாதையில் நடக்க ஆரம்பிக்கிறது.
ரோபோவின் பின்னால் அதன் எஜமானர் நடந்து செல்கிறார். அவர் கையில் ரிமோட் கண்ட்ரோல் வைத்து ரோபோவை இயக்குவது தெரிகிறது.
அதற்கேற்ப ரோபோ மனிதனைவிட சற்று வேகமான நடையில் பரபரப்பாக ஓடுவதுபோலவே நடந்து செல்கிறது. இந்த வீடியோ வலைத்தளவாசிகளை வெகுவாக கவர்ந்தது.
ரோபோக்கள் இன்னும் அதிகமாக மனிதர்களுடன் வலம் வரும் காலம் நெருங்கிவிட்டதாக பலரும் கருத்து பதிவிட்டு பாராட்டினார்கள்.
https://www.instagram.com/reel/DMu7x–p0e5/?utm_source=ig_web_copy_link
 
        



 
                         
                            
