காங்கோவில் IS ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களால் தேவாலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 21 பேர் பலி

காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள கொமாண்டா பகுதியில் அமைந்துள்ள ஒரு தேவாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென தேவாலயத்திற்குள் ஆயுதங்களுடன் புகுந்த பயங்கரவாதிகள், அங்கு இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தினர்.
இதனால் அங்கிருந்த மக்கள் பயத்தில் சிதறியடித்து ஓடத் தொடங்கினர். அவ்வாறு ஓடியவர்களை துரத்திச் சென்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். மேலும் தேவாலயத்திற்கு அருகே இருந்த சில வீடுகள் மற்றும் கடைகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் 21 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் அரசு ஆதரவு பெற்ற மத அடிப்படைவாத அமைப்பை சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.