பிரித்தானியாவை அடையும் முயற்சியில் பலியான உயிர் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு!

வடக்கு பிரான்சில் உள்ள கடற்கரையிலிருந்து ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற ஒருவர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் இன்று (26.07) உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனால் இந்த ஆண்டு ஆபத்தான நீர்வழிப் பாதையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 18 ஆக உயர்ந்துள்ளது.
பிரிட்டனை அடைய முயன்ற ஒருவர் படகில் மாரடைப்பு ஏற்பட்டு பின்னர் பிரான்ஸ் திரும்ப முயற்சித்த நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பவுலோன்-சுர்-மெர் நகருக்கு அருகிலுள்ள எக்விஹென் கடற்கரைக்கு அருகில் அந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டார். அவரை உயிர்ப்பிக்க தீயணைப்பு வீரர்கள் முயற்சித்த போதிலும் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அவரது மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
(Visited 3 times, 1 visits today)