ஏஐ தொழில்நுட்பத்துடன், சிறந்த செயல்திறனை வழங்கும் டெல் பிளஸ் சீரிஸை அறிமுகம்

தொழில்நுட்ப உலகில் முன்னணி நிறுவனமாக வலம்வரும் டெல், இந்தியாவில் தனது புதிய பிளஸ் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வரிசை, படைப்பாளிகள், தொழில்முனைவோர் மற்றும் அன்றாட பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் டெல் 14 பிளஸ், டெல் 14 2-இன்-1பிளஸ், மற்றும் டெல் 16 பிளஸ் ஆகிய மாடல்கள் இடம்பெறுகின்றன. இவை அனைத்துமே, சமீபத்திய ஏஎம்டி ரைசன் ஏஐ 300 தொடர் சிப்களால் இயங்குகின்றன.
முக்கிய அம்சங்கள்:
ஏஐ இயங்கும் செயல்திறன்: ஏஎம்டி ரைசன் ஏஐ 300 சிப்கள் மூலம் மேம்பட்ட செயல்திறன், அதிகபட்சமாக ரைசன் ஏஐ 7 350 வரை
22 மணி நேரம் வரை பேட்டரி ஆயுள்
ஃபுல் எச்டி+ (FHD+) டால்பி விஷன் டிஸ்ப்ளே – 16:10 விகிதம், 300 நிட்ஸ் பிரைட்னஸ்
டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட ரியல்டெக் சவுன்ஸ் (Realtek Sounz) ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
ஏஐ ஆதரவு கொண்ட இரைச்சலை நீக்கக்கூடிய ஒலி அமைப்பு
ஃபுல் எச்டி+ (FHD+) வெப்கேம் – குறைந்த ஒளியில் கூட சிறந்த செயல்திறன் கொண்டது
வைஃபை 7 7 & எக்ஸ்பிரஸ் சார்ஜிங் (60 நிமிடங்களில் 80% வரை சார்ஜாகும்)
சுற்றுசூழலுக்கு உகந்த வடிவமைப்பு: மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியம், ஸ்டீல் மற்றும் கடலில் இருந்து பெறப்பட்ட பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் போன்றவை
மிலிட்டரி தரம்: MIL-STD-810H சான்றிதழ் பெற்ற உலோக கட்டமைப்பு
விலை விவரங்கள்:
டெல் 14 பிளஸ் (Dell 14 Plus) – ரூ.76,940 முதல்
டெல் 14 2-இன்-1 பிளஸ் (Dell 14 2-in-1 Plus) – ரூ.87,670 முதல்
டெல் 16 பிளஸ் (Dell 16 Plus) ரூ.76,400 முதல்
மேலே குறிப்பிடப்பட்ட இந்த மாடல்களை டெல்லின் அதிகாரப்பூர்வ இணையதளமான Dell.com, டெல்லின் அதிகாரப்பூர்வ ஸ்டோர்கள் (Dell Exclusive Stores) மற்றும் குரோமா (Croma), ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital), விஜய் சேல்ஸ் (Vijay Sales) உள்ளிட்ட முன்னணி சில்லறை விற்பனை கடைகள் மற்றும் முக்கிய மின் வணிக தளங்களிலும் வாங்கலாம்.
“இந்திய நுகர்வோரின் வளர்ந்துவரும் தேவைகளுக்கு ஏற்ப சக்திவாய்ந்த, மல்டிமீடியா தீர்வுகளை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை இந்த வெளியீடு பிரதிபலிக்கிறது” என்று டெல் இந்தியா நுகர்வோர் சேனலின் மூத்த இயக்குநர் மற்றும் பொது மேலாளரான அதுல் மேத்தா கூறினார்.
“எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாத்தியமானதை நாங்கள் மறுவரையறை செய்கிறோம்” என்று டெல் நுகர்வோர் PC-க்கள் மற்றும் ஓ.எஸ்-களுக்கான துணைத்தலைவர் ஜேசன் டர்ஸ்ட் தெரிவித்தார்.
இந்த புதிய டெல் பிளஸ் ஏஐ லேப்டாப் சீரிஸ், நவீன தொழில்நுட்பம், சுருக்கமான வடிவமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவுடன் செயல்திறனை ஒருங்கிணைத்து, ஏஐ மூலம் இயங்கும் மடிக்கணினிகளுக்கான புதிய தரநிலையை நிர்ணயிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.