ஜனாதிபதியின் அறிவுறுத்தலை ஏன் செயற்படுத்த முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி!
அரச நிதி தொடர்பான தெரிவுக் குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வாவை நியமிக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள நிலையில் அதனை செயற்படுத்தாத பிரதமரே தற்போது உள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதியின் அறிவுறுத்தலை ஏன் செயற்படுத்த முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமர் தினேஷ் குணவர்தனவை நோக்கி கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் பிரதமர் சபையில் அமைதியாக இருந்தார்.
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று (25) இடம்பெற்ற போது விசேட கூற்றை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர் உரையாடிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் ஹர்ஷ டி சில்வா பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தெளிவுப்படுத்தியுள்ளார்.
அரச நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் பதவி வகித்துக் கொண்டு ஹர்ஷ டி சில்வா எடுத்த நடவடிக்கைகளினால் ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் பொறாமை கொண்டார்கள்.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.அரச நிதி தொடர்பான நிதி தெரிவுக் குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வாவை நியமிக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலை கூட செயற்படுத்தாத பிரதமரா உள்ளார்இஜனாதிபதியின் அறிவுறுத்தலை ஏன் செயற்படுத்த முடியாது என பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பினார்.