மீண்டும் விபத்தில் சிக்கினார் அஜித்…

நடிகர் அஜித் தற்போது GT 4 ஐரோப்பிய சீரிஸ் கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அதனால் அவர் படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளாமல் ரேஸில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
மீண்டும் அஜித் குட் பேட் அக்லீ இயக்குனர் ஆதிக் உடன் கூட்டணி சேர்ந்து இருக்கும் நிலையில் அதன் ஷூட்டிங் இந்த வருடத்தின் இறுதியில் தொடங்க இருக்கிறது.
அஜித் இதற்கு முன் நடந்த சில ரேஸ்களில் விபத்தில் சிக்கி இருந்தார். இந்நிலையில் தற்போது நடக்கும் GT 4 ஐரோப்பிய சீரிஸ் ரேஸிலும் விபத்தில் சிக்கி இருக்கிறார்.
வளைவில் திரும்பும்போது ஏற்கனவே பழுதாகி நின்று இருந்த கார் மீது அஜித்தின் கார் மோதியது. இதில் அஜித் கார் சேதம் அடைந்தாலும் அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
(Visited 2 times, 2 visits today)