கும்பல் வன்முறைக்கு மத்தியில் ஹைட்டிக்கு விஜயம் செய்த கொலம்பியா ஜனாதிபதி
கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ இந்த ஆண்டு இரண்டாவது முறையாக ஹைட்டிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
கரீபியன் நாட்டை தொடர்ந்து கும்பல் வன்முறைகள் பாதித்து வரும் நிலையில், அவருக்கு ஆதரவளிக்கும் வகையில் அவர் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக அங்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
பெட்ரோவின் வருகை, பாதுகாப்பு, வர்த்தகம், கல்வி, விவசாயம் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான போராட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தியதாக கொலம்பிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸில் கொலம்பிய தூதரகத்தைத் பெட்ரோ திறந்துவைத்துள்ளார்.
ஹைட்டியின் பாதுகாப்பை வலுப்படுத்த உதவுவதாகவும், ஹைட்டி அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க முன்வந்துள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.





