ஒரே வருடத்தில் 9,741 கோடி வருவாய் ஈட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்

இந்திய கிரிக்கெட் வாரியம் உலகின் பணக்கார விளையாட்டு அமைப்புகளில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் 2023-24ம் நிதியாண்டில் இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.9,741.7 கோடி வருவாய் ஈட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் IPLன் பங்களிப்பு ரூ.5,761-ஆக உள்ளது.
சர்வதேச போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமைகள் உள்பட IPL அல்லாத ஊடக உரிமைகளை விற்றதன் மூலம் ரூ.361 கோடி கிடைத்தது. கிரிக்கெட் வாரியத்திடம் ரூ.30 ஆயிரம் கோடிக்கு இருப்பு உள்ளது.
இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி வட்டியை ஈட்டுகிறது. ஸ்பான்சர்ஷிப்கள், ஊடக ஒப்பந்தங்கள் மற்றும் போட்டி நாள் வருவாய் உள்ளிட்டவை மூலம் கணிசமான வருவாய் வருகிறது.
இந்த வருவாயில் 59 சதவீதம் ஐ.பி.எல் போட்டி தொடரில் இருந்து வந்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.பி.எல் போட்டி தொடர், கிரிக்கெட் வாரியத்தின் வருவாயில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.