இலங்கையில் பாடசாலை மாணவன் மரணம் – பொலிஸார் வெளியிட்ட தகவல்

வெல்லவாய வீரசேகரகம பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் பாடசாலை மாணவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் மாணவனின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 16 வயதுடைய பாடசாலை மாணவராவார். இவர் இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 12 times, 1 visits today)