2,000 ஆண்டுகள் பழமையான சவப்பெட்டி பறிமுதல் – எகிப்திடம் ஒப்படைத்த பெல்ஜியம்

பெல்ஜிய அதிகாரிகள் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான மரச்சவப்பெட்டியையும், அதோடு ஒரு பழமையான மரத்தாடியையும் எகிப்திற்கு மீள ஒப்படைத்துள்ளனர்.
இந்த மரச்சவப்பெட்டியை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிரசெல்ஸில் பொலிஸார் பறிமுதல் செய்யப்பட்டது.
10 ஆண்டுகள் நீண்ட விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு, இதனை சொந்த நாடான எகிப்திற்கு திருப்பி அனுப்புவது நியாயமான செயல் என பிரசெல்ஸ் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
3ஆம் நூற்றாண்டு மற்றும் 4ஆம் நூற்றாண்டுக்கிடையிலான காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தச் சவப்பெட்டியில், “Pa-di-Hor-pa-khered” என்ற நபர் அடக்கம் செய்யப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது.
அவர், இறந்த பின் கீழுலகத்தின் கடவுள் Osiris ஆக மாறியதாகவும், அந்தச் சவப்பெட்டியில் வர்ணிக்கப்பட்டுள்ளது.
(Visited 8 times, 8 visits today)