அவுஸ்திரேலியாவில் பொலிஸாரால் தாக்கப்பட்ட 95 வயது மூதாட்டி உயிரிழப்பு!
கடந்த வாரம் அவுஸ்திரேலியாவில் பாதுகாப்பு இல்லத்தில் பொலிஸாரால் தாக்கப்பட்ட 95 வயது மூதாட்டியான கிளேர் நவ்லேண்ட் மரணமடைந்தார். கூமா மருத்துவமனையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மூத்த கான்ஸ்டபிளான கிறிஸ்டியன் ஒயிட், பராமரிப்பு நிலையத்தில் இருந்த மூதாடியை தாக்கியமைக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கிறிஸ்டியன் ஒயிட் ஜுலை மாதம் 05 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. அதுவரையில் அவர் சமூகத்தில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்ட நவ்லேண்ட், ஒரு முறை ஸ்டீக் கத்தியுடன் ஆயுதம் ஏந்தியிருந்தார், என்றும், தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் நவ்லேண்ட் தாக்குவதற்கு முன்பாகவே ஒயிட் தனது டேசரை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளார்.