கிரேக்கத்தின் தெற்கு தீவில் தொடரும் காட்டுத்தீ : ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

கிரேக்கத்தின் தெற்கு தீவான கிரீட்டில், காற்றுத்தீ வேகமாக பரவி வருகிறது. இதனால் அந்த பகுதியில் இருந்து 1500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தீவின் தெற்கு கடற்கரையில் உள்ள கிரீட்டின் ஐராபெட்ரா பகுதியில் காடுகள் மற்றும் விவசாய நிலங்களில் எரிந்த தீயை அணைக்க 10 விமானங்கள் மூலம் 230 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
இரண்டு பேர் படகு மூலம் இரவு முழுவதும் வெளியேற்றப்பட்டனர், அதே நேரத்தில் கடல் வழியாக மேலும் வெளியேற்றங்கள் தேவைப்பட்டால் ஆறு தனியார் படகுகள் தயார் நிலையில் இருந்தன என்று கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
தீயணைப்பு சேவை மற்றும் ஒரு சிவில் பாதுகாப்பு நிறுவனம் வெளியேற்றங்களுக்கு மொபைல் போன் எச்சரிக்கைகளை வெளியிட்டது மற்றும் குடியிருப்பாளர்கள் தங்கள் சொத்துக்களை காப்பாற்ற முயற்சிக்க திரும்பி வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தது.