சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வெளியான தகவல்
சிங்கப்பூரில் வேலையிடங்களில் உயர் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் நடப்புக்கு வந்த நிலையில் அந்த நடைமுறை காலம் மே 31 ஆம் திகதியுடன் முடிவடையும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.
ஆனாலும் கூட சில நிபந்தனை தேவைகள் தொடர்ந்து நடப்பில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், நிலையான வேலையிட உயர் பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளை உருவாக்க புதிய நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு வேலையிடங்களில் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்த பிறகு இந்த உயர் பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த ஆண்டு மட்டும் வேலையிடங்களில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 46 என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் அந்த பாதுகாப்பு காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது.
இதன் பாதுகாப்பு காலம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து 100,000 ஊழியர்களுக்கும் 0.8 என்ற அளவில் மரணங்கள் குறைந்துள்ளது.