கூலி இசைவெளியீட்டு விழா எப்போது தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான திகதி குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தங்கக் கடத்தலை முதன்மைக் கதையாக வைத்து இப்படம் முழுநீள ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கியமான சண்டைக் காட்சியொன்று தாய்லாந்திலும் படமாக்கப்பட்டுள்ளது.
அனிருத் இசையமைத்த இப்படத்தின் முதல் பாடலான ‘சிக்கிடு’ பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
இந்த நிலையில், கூலி திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஜூலை 27 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Visited 2 times, 2 visits today)