அமெரிக்காவின் பெரு நகரங்களில் மின்தடை : விமான சேவைகள் பாதிப்பு!
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிலையத்தில் பரவலான மின்தடை ஏற்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கானோர் விமான நிலையங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் பயணிகள் பலர் ஓடுபாதையில் சிக்கிக் கொண்டதாகவும், காத்திருக்கும் பகுதிகளில் நெரிசல் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
சில பயணிகள் சமூக ஊடகங்களில் தங்கள் கோபத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர், அவர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாயிலில் அமர்ந்திருப்பதாகக் கூறியுள்ளனர்.
நிறுவனத்தின் பராமரிப்பு அமைப்பு “செயலிழக்கச்” செய்யப்பட்டதால் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், டல்லாஸ், நியூயார்க் மற்றும் பீனிக்ஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின்தடை ஏற்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
(Visited 5 times, 1 visits today)





