இந்தியாவில் வேகமாக பரவும் கொவிட் தொற்று

ஆசிய பிராந்தியத்தை அச்சுறுத்தும் கொவிட் தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
தொற்றினால் கேரளா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் 685 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்றைய நாள் தரவுகளுக்கமைய கடந்த 10 நாட்களில் மாத்திரம் 3,395 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதேபோன்று, சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியப் பிராந்திய நாடுகளில் பரவிவரும் ஒமிக்ரோன் வைரஸின் இரண்டு உப திரிபுகள் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)