இலங்கை – 14 வயது சிறுமி கர்ப்பம் ;சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹப்புத்தளை, கெல்பன் தோட்டத்தை சேர்ந்த சிறுமி, வயிற்று வலி காரணமாக தியத்தலாவ வைத்தியசாலையில் சனிக்கிழமை (31) இரவு அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியை பரிசோதித்த வைத்தியர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை பொலிஸாரால் சிறுமியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், கெல்பன் தோட்டத்தை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(Visited 4 times, 1 visits today)