சிங்கப்பூர் முழுவதும் 145 பேர் அதிரடியாக கைது – சுற்றிவளைத்த பொலிஸார்
சிங்கப்பூர் முழுவதும் 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிரடி சோதனை நடவடிக்கையில் சந்தேக நபர்கள் 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சோதனை நடவடிக்கையை கடந்த மே 5 முதல் மே 19 ஆம் திகதி வரை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டனர்.
அதாவது பேடோக், சோவா சூ காங், பாசிர் ரிஸ், உட்லண்ட்ஸ் மற்றும் யுஷுன் உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடந்தது.
அவர்களிடம் இருந்து போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது, அதன் மதிப்பு சுமார் 354,000 சிங்கப்பூர் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அனைவரிடமும் விசாரணைகள் நடந்து வருவதாக CNB தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் செய்வது சட்டப்படி குற்றமாகும். இதற்காக கட்டாய மரண தண்டனை கூட சந்திக்க நேரிடலாம்.
(Visited 13 times, 1 visits today)