நீரிழிவு நோயாளிகள் கிட்னியை பாதுகாக்க செய்ய வேண்டியவை

உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் சிறுநீரகம் உடலின் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்று. சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் அல்லது செயல் இழந்தால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் உபாயம் அதிகரிக்கிறது.
இரத்தத்தை வடிகட்டி, சிறுநீர் வழியாக உடலில் இருந்து அசுத்தங்களை வெளியேற்றும் சிறுநீரகம் ஆரோக்கியமாக செயல்படுவது அவசியம். இல்லை எனில் உடலில் நச்சுக்கள் அதிகரித்து, ஆபத்தான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
நீரழிவு அல்லது இரத்த சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, மற்றவர்களை விட சிறுநீரகம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் மிக அதிகம். ஏனெனில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால், சிறுநீரகத்தின் ரத்த நாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கத் தொடங்குகின்றன. இதன் காரணமாக சிறுநீரகங்கள், ரத்தத்தை சரியாக வடிகட்ட முடியாமல், சிறுநீர் மூலம் புரதம் வெளியேற தொடங்கும்.
சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, நீரிழிவு நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை
உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிக அவசியம். இதன் மூலம் சிறுநீரகம் சிறப்பாக டீடாக்ஸ் செய்யப்படும்.
தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டிய சில பழங்கள்
பழங்களில் கொய்யா மற்றும் நாவல் பழம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு (Diabetes Control Tips), சிறுநீரகங்களை பாதுகாக்கவும் உதவுகிறது. எனவே இந்தப் பழங்களை தினமும் முடியாவிட்டால் கூட, வாரத்தில் நான்கு நாட்களாவது சேர்த்துக் கொள்வது நல்லது.
இரத்த சர்க்கரை கொலஸ்ட்ரால் இரண்டையும் கட்டுப்படுத்தும் பூண்டு என்னும் அருமருந்து
பூண்டில் சிறுநீரகத்தை பாதுகாக்கும் வளர்ச்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் உள்ளன. வெறும் வயிற்றில் இரண்டு பூண்டு பற்களை பச்சையாக உட்கொள்வது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும். அதே நேரத்தில் கொலஸ்ட்ரால் அளவும் கட்டுக்குள் இருக்கும்.
நீரழிவு நோய்க்கு முடிவு கட்டும் மூலிகை பானம்
இலவங்கப்பட்ட என்னும் அற்புத மசாலா, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதோடு, பல நோய்களுக்கு அருமருந்தாகும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. இலவங்கப்பட்டையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தினமும் குடிப்பதால், சேர்ந்துள்ள நச்சுக்களும் நீங்கும்.
உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளுதல்
இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, உணவு கட்டுப்பாடுடன் உடற்பயிற்சியும் மிக அவசியம். தினமும் இல்லாவிட்டாலும் வாரத்திற்கு ஐந்து நாட்கள் ஆவது உங்களால் இயன்ற உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
நீரழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள்
நீரழிவு நோயாளிகள் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், சிறுநீரகம் தொடர்பான நோய் தாக்காமல் இருக்கவும் ஆரோக்கியமற்ற சில உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதிக சர்க்கரை சேர்த்த குளிர்பானங்கள், பேக்கேஜ் செய்யப்பட்ட பழச்சாறுகள், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக உப்பு சேர்த்த உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், மதுபானங்கள் சிகரெட் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.