இந்தோனேசியாவில் 2 நாட்களில் 8 முறை குமுறிய எரிமலை – மக்களுக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் 2 நாட்களில் 8 முறை எரிமலை குமுறியுள்ளதால் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மவுண்ட் லெவோடொபி லகி-லகி எரிமலையின் எச்சரிக்கை நிலை அதிகபட்ச நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள Flores தீவில் மலை அமைந்துள்ளது. நேற்று முன்தினம் எரிமலைச் சாம்பல் சுமார் 3 கிலோமீட்டர் முதல் 5.5 கிலோமீட்டர் உயரம் வரை பறந்தது.
எரிமலை தொடர்ந்து துடிப்புடன் இருப்பதால் எச்சரிக்கை நிலை உயர்த்தப்பட்டதாய் எரிமலை கண்காணிப்பு ஆணையம் தெரிவித்தது.
நேற்று எரிமலை மீண்டும் வெடித்தது. அந்த வட்டாரத்தில் இதுவரை குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்படவில்லை.
விமானச் சேவைகளும் ரத்து செய்யப்படவில்லை. லவோடொபி லகி-லகி எரிமலை கடந்த ஆண்டு நவம்பரிலும் வெடித்த நிலையில் அப்போது 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.