கடுமையான கூடுதல் நிபந்தனைகளுடன் நோவாவேக்ஸ் கொவிட்-19 தடுப்பூசிக்கு F.D.A ஒப்புதல்

அமெரிக்காவின் உணவு, மருந்து நிர்வாகம் (FDA) நோவாவேக்ஸ் கொவிட்-19 தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அதேவேளை, இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளத் தகுதிபெறுவதற்குரிய நிபந்தனைகளை FDA அதிகரித்துள்ளது. அதன்படி, நுவவேக்சாய்ட் (Nuvavaxoid) எனப்படும் இந்தத் தடுப்பூசியை 65 வயதையும் தாண்டியோர் போட்டுக்கொள்ள முடியாது.
அதோடு, கொவிட்-19 கிருமித்தொற்றால் மோசமாக நோய்வாய்ப்படக்கூடிய சாத்தியத்தை அதிகரிக்கும் குறைந்தது ஓர் உடல்நலப் பிரச்சினை உள்ள 12லிருந்து 64 வயதுக்கு உட்பட்டோரும் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முடியாது. சம்பந்தப்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் குறித்த விவரங்கள் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிப்பதைத் தெரிவிக்கும் கடிதத்தில் இடம்பெறவில்லை.
நோவவேக்ஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள மக்களுக்கு வழிவகுக்க இந்த ஒப்புதல் ஒரு முக்கிய மைல்கல் என்றார் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் ஜேக்கப்ஸ்.
முன்னதாக முதலில் விதிக்கப்பட்ட கெடுவான ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குள் FDA நோவவேக்ஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் இந்தத் தடுப்பூசியின் பயன்பாடு கேள்விக்குறியானது.
தாமதத்துக்கு நோவாவேக்ஸ் தடுப்பூசியில் இடம்பெறும் மருந்துக் கலவையே காரணம் என்று அமெரிக்க சுகாதார, மனிதச் சேவைகள் அமைச்சரான ராபர்ட் எஃப். கேன்னடி ஜூனியர் இம்மாதத் தொடக்கத்தில் சிபிஎஸ் ஒளிவழியுடன் நடந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.