மனித உருவ ரோபோக்கள் மனிதர்களுக்கு மாற்றாக இருக்காதென அறிவித்த நிபுணர்

மனித உருவ ரோபோகள் மனிதர்களுக்கு மாற்றாக இருக்காதென என, சீனாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப மையத்தின் துணைத் தலைவர் லியாங் லியாங் குறிப்பிட்டுள்ளார்.
ஹியூமனாய்டு எனப்படும் மனித உருவ ரோபோக்கள், பெருமளவில் வேலைவாய்ப்பின்மையை உருவாக்கும் என்பதால் மனிதர்களுக்கு மாற்றாக இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உருவ ரோபோக்களால் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
மனிதர்கள் பணியாற்ற முடியாத ஆபத்தான சூழல்களில் அவை செயல்படும் என தெரிவித்துள்ளார்.
விண்வெளி மற்றும் ஆழ்கடல் ஆய்வுகளில் இந்த மனித உருவ ரோபோக்கள் மிகவும் உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மனிதர்களுக்கு இரவு நேரத்தில் ஓய்வு தேவைப்படும்போதும், தொழிலாளர் பற்றாக்குறையின்போதும் இந்த ரோபோக்கள் வேலை செய்து உற்பத்தியை அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார்.
(Visited 5 times, 5 visits today)