அதிர வைக்கும் ஆக்ஷன் காட்சிகள்…. தெறிக்கவிடும் தக் லைஃப் டிரெய்லர்

கமல் ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான திரைப்படம் “தக் லைஃப்”. இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.
இந்த டிரெய்லர் வெளியீட்டுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர்.
வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைத்தளங்களில் “தக் லைஃப்” டிரெய்லர் வைரலாகி வருகிறது. கமல்ஹாசன் இதுவரை காணாத அவதாரத்தில் மிரட்டலாக இருக்கிறார்.
அவருக்கு நிகராக சிம்புவும் தனது நடிப்பால் கவனத்தை ஈர்க்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை டிரெய்லருக்கு மேலும் வலு சேர்க்கிறது. ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு ஆகியவை படத்தின் தரத்தை உயர்த்திக் காட்டுகின்றன. சண்டைக் காட்சிகள் மிகவும் பிரமாண்டமாகவும், விறுவிறுப்பாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
(Visited 2 times, 2 visits today)