பொருளாதார நெருக்கடியால் திணறும் கியூபா – தினமும் 4 மணி நேரம் மின்வெட்டு

கியூபாவில் தினமும் 4 மணி நேரம் மின்வெட்டு அமல்ப்படுத்துவதால் மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
பொருளாதார நெருக்கடியால் தடுமாறி வரும் கியூபா நாட்டில் மின்னுற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தலைநகர் ஹவானாவில் தினமும் 4 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
நாட்டின் பல்வேறு ஊர்களிலும் மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மட்டுமின்றி, மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொழில் முடக்கம், வர்த்தகம் பாதிப்பால் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிக்க கூடுமென தகவல்கள் வெளியாகி உள்ளன.
(Visited 5 times, 5 visits today)