இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் : 32 விமான நிலையங்களும் மீளவும் திறப்பு!

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், மூடப்பட்டிருந்த 32 விமான நிலையங்கள் மீளவும் திறக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய சண்டிகர், ஸ்ரீநகர், அமிர்தசரஸ், லூதியானா, பந்தர், கிஷன்கர், பாட்டியாலா, ஷிம்லா, ஜெய்சால்மர், பதான்கோட், ஜம்மு, பிகானர், லே, போர்பந்தர், தரம்சாலா, பதிண்டா, ஜோத்பூர், ஜாம் நகர், பூஜ், ஆதம்பூர், அம்பாலா, ஹல்வாரா, ஹிண்டன், காசியாபாத், கண்ட்லா, கங்ரா, கேசோட், குலுமணாலி, முந்த்ரா உள்ளிட்ட விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குநர்கள் இடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை இன்று (12.05) நடைபெற உள்ளது.
(Visited 1 times, 1 visits today)