பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி இன்று துவங்கப்பட்டது
ராணிப்பேட்டை அடுத்த விசி மோட்டார் ஆட்டோ நகர் பகுதியில் அமைந்துள்ள திறந்தவெளி மைதானத்தில் ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சார்பில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி இன்று துவங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி வளர்மதி அவர்கள் கலந்து கொண்டு பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியினை துவக்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பள்ளி வாகனங்களின் தரம் குறித்தும் அதில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் மேலும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டு ஓட்டுநர்களிடம் கேட்டறிந்தார் மேலும் பள்ளி பேருந்துகளில் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமாக ஏதேனும் குறைபாடுகள் இருக்கும் அதனை உடனடியாக நிவர்த்தி செய்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
அதைத்தொடர்ந்து பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு தீ விபத்து உள்ளிட்ட விபத்து காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளை கையாள்வது குறித்தான விழிப்புணர்வு தீயணைப்பு துறையினரால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ராணிப்பேட்டை வட்டாரத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் இருந்து சுமார் 250 பள்ளி பேருந்துகள் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டது இந்த ஆய்வில் ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சிவகுமார் அரக்கோணம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செங்கோட்டு வேலன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.