அமெரிக்கா – அட்லாண்டாவில் பதிவான நிலநடுக்கம் : வீடுகள் குலுங்கியதால் பரபரப்பு!

அமெரிக்காவின் ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் இன்று (10.05) காலை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் அமெரிக்காவின் பல மாநிலங்களை உலுக்கியதோடு, வீடுகளையும் பயங்கரமாக குலுக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, இன்று காலை 9 மணியளவில் டென்னசியின் கிரீன்பெக் அருகே பதிவான இந்த நிலநடுக்கம் பல மாநிலங்களிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் டென்னிசி-ஜார்ஜியா எல்லைக்கு அருகில் நகரத்தின் தென்கிழக்கே 13 மைல் தொலைவில் ஏற்பட்டது, ஆனால் பயங்கரமான நிலநடுக்கம் நூற்றுக்கணக்கான மைல்கள் பரவி வடக்கு மற்றும் தெற்கு கரோலினா வரை உணரப்பட்டது என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியாவில்லை.
(Visited 1 times, 1 visits today)