இந்திய – பாகிஸ்தான் போர் நடவடிக்கையால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நேரடி பாதிப்பு

இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையிலான போர் பதற்றம் இலங்கையை நேரடியாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள பிராந்திய நெருக்கடி சூழ்நிலை காரணமாக வெற்றிலை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெற்றிலை ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளமையால் கராச்சிக்கான வெற்றிலை ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய, எப்பலதெனிய வெற்றிலை விவசாய நல சங்கத்தின் தலைவர் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து அதிகளவான வெற்றிலை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
வாரத்தில் இரு நாட்களுக்கு விவசாயிகளிடமிருந்து வர்த்தகர்கள் வெற்றிலையைக் கொள்வனவு செய்கின்றனர்.
எனினும், விமான சேவை நிறுத்தப்பட்டமையினால் வெற்றிலைகள் விமான நிலையத்தில் தேங்கியுள்ளதாகவும் எப்பலதெனிய வெற்றிலை விவசாய நல சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
அதேவேளை, பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. இதன் காரணமாக அதன் மூலம் கிடைக்கும் வருமானம் கேள்விக்குறியாக மாறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.