காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கவுள்ள அமெரிக்கா

காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக அமெரிக்கா புதிய திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசாவிற்கான மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தடுத்துள்ளமையினால், ஐக்கிய நாடுகள் சபையின் அறிவுறுத்தல்களை மீறி, தனியார் நிறுவனங்கள் மூலம் மனிதாபிமான உதவிகளை வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், காசா பகுதிக்கான மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தடுத்துள்ளமையினால், காசாவில் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 1 times, 1 visits today)