இந்தியா – பாக். விவகாரத்தில் தலையிட மாட்டோம்: அமெரிக்க துணை ஜனாதிபதி அறிவிப்பு

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், அது எங்கள் வேலையும் அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மற்றும் பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை அடுத்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“போர் பதற்றத்தை தவிர்க்க வேண்டும் என நம்மால் அவர்களிடம் சொல்ல மட்டுமே முடியும். இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றத்தில் நாம் தலையிட போவதில்லை.
அது நம் பணியும் அல்ல. இந்தியா மற்றும் பாகிஸ்தான் வசம் ஆயுதங்கள் கீழே போட வேண்டும் என அமெரிக்கா சொல்ல முடியாது. இந்த மோதல் பிராந்திய ரீதியிலான போராகவோ அல்லது அணு ஆயுத மோதலாகவோ மாறக்கூடாது என்பது நம் எதிர்பார்ப்பு. அப்படி நடந்தால் பேரழிவு ஏற்படும். இது அந்த நாடுகளின் தலைவர்கள் வசம் உள்ளது” என வான்ஸ் கூறியுள்ளார்.