இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழலில் எல்லை தாண்டிய சீனர்கள் 4 பேர் கைது
 
																																		இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், எல்லை தாண்டியதாக சீனாவைச் சேர்ந்த நால்வரை காவலர்கள் கைது செய்தனர்.
இது குறித்து ரக்சௌல் ஆணையர் தீரேந்திர குமார் கூறுகையில், “தரையா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மைத்ரி பாலத்தின் அருகே சீன நாட்டைச் சேர்ந்த நால்வர் எல்லை தாண்டி வந்தனர். அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தினோம்.
“அவர்கள் சீனாவின் ஹூனான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. அவர்களை உடனே கைதுசெய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். அவர்களை வெள்ளிக்கிழமை (மே 9) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த இருக்கிறோம்,” என்று சொன்னார்.
அந்தச் சீனர்களுக்கு வழிகாட்டிகளாகச் செயல்பட்ட இரண்டு நேப்பாளப் பெண்களும் காவலில் எடுக்கப்பட்டனர். காவல்துறையினரின் தீவிர விசாரணைக்குப் பின் அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர்
(Visited 1 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
