நீரிழிவு நோய் இல்லாவிட்டாலும் அடிக்கடி சிறுநீர் வரும் பிரச்சினை உள்ளதா? உங்களுக்கான பதிவு

நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருந்தால், உங்கள் உடலைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப உணவுகளை உட்கொள்ள வேண்டும். சிறுநீர் பிரச்சனை உள்ளவர்கள் தவறுதலாக கூட கரும்பு சாற்றை உட்கொள்ளக்கூடாது. ஒரு சாதாரண மற்றும் ஆரோக்கியமான நபர் ஒரு நாளைக்கு 6 முதல் 8 முறை சிறுநீர் கழிப்பார், இது பரவாயில்லை. இந்த சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கை, ஒருவர் குடிக்கும் நீரின் அளவு, உடல் செயல்பாடு, குளிர் அல்லது வெப்பமான வானிலை, வயது மற்றும் உணவுமுறை போன்ற பல காரணிகளைப் பொறுத்தது.
சில நோய்களால் கூட சிலர் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். சிலருக்கு ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படும். ஆனால், அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு நம் நினைவுக்கு வரும் மிகப்பெரிய காரணம் நீரிழிவு நோய். அதிக இரத்த சர்க்கரை காரணமாக சிறுநீர் விரைவாக வெளியேறும். இதுமட்டும் காரணமா என்றால் இல்லை. சிறுநீர் கழித்தல் அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன, அதாவது சிறுநீர் பாதை நோய்த்தொற்று (UTI) காரணமாக இருக்கலாம். அதிக தண்ணீர், திரவ உணவுகளை உட்கொள்வது, அதிகப்படியான காபி குடிப்பது, ஆல்கஹால் குடிப்பது, புரோஸ்டேட் பிரச்சினைகள் கூட சிறுநீர் கழிப்புக்கு காரணமாக இருக்கும்.
அதேநேரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாதவர்கள், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருப்பவர்கள், உணவில் சில மோசமான உணவுகளை உட்கொள்வதுதான் அவர்களுக்குக் காரணம் என்று ஆயுர்வேத நிபுணர் நித்யானந்தம் ஸ்ரீ கூறினார். சில உணவுகள் சிறுநீர் பெருக்கிகளாகும், அதாவது அவை சிறுநீர் கழிப்பதை அதிகரிக்கும். நாள் முழுவதும் உங்கள் உணவில் அவற்றை உட்கொண்டால், நீங்கள் அதிகமாக சிறுநீர் கழிப்பீர்கள். கோடையில் அதிகமாகவும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கும் எந்தெந்த மோசமான உணவுகள் காரணமாகின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருந்தால், உங்கள் உடலைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப உணவுகளை உட்கொள்ள வேண்டும். சிறுநீர் பிரச்சனை உள்ளவர்கள் தவறுதலாக கூட கரும்பு சாற்றை உட்கொள்ளக்கூடாது. இந்த சாறு குளிர்ச்சியானது. இதை குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிப்பீர்கள். சிறுநீர் கழிக்கும் பிரச்சனையை குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் கரும்புச் சாற்றை உட்கொள்ளவே கூடாது.
அடிக்கடி சிறுநீர் கழிப்பதில் சிக்கல் உள்ளவர்கள், நாள் முழுவதும் உணவில் அரிசி மற்றும் உருளைக்கிழங்கு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று ஆயுர்வேத நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உருளைக்கிழங்கு மற்றும் அரிசி இரண்டும் சளியை உண்டாக்கும் மற்றும் அவற்றை உட்கொள்வது வயிற்றில் அதிக வாயுவை உருவாக்கி அடிக்கடி சிறுநீர் கழிக்க காரணமாகிறது.
பெரும்பாலும் மக்கள் இரவு உணவிற்குப் பிறகு இரவில் ஐஸ்கிரீம் சாப்பிடுவார்கள், ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் அதிக சிறுநீர் கழிப்பீர்கள். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு குளிர்ந்த பொருட்களை உட்கொள்வது அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இரவில் தயிர் மற்றும் வாழைப்பழம் சாப்பிடுவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். அதிக கனமான உணவுகளை உட்கொள்வது வயிற்றில் வாயுவை ஏற்படுத்தி அடிக்கடி சிறுநீர் கழிக்க வழிவகுக்கிறது. இரவில் வறுத்த மற்றும் காரமான உணவுகளை சாப்பிட்டால், உங்கள் வயிற்றில் வாயு உருவாகி, இரவு முழுவதும் உங்களை தொந்தரவு செய்யும்.
நீங்கள் எப்போதும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று உணர்ந்தால், எல்லா வகையான பழச்சாறுகளையும் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஜூஸ் குடிப்பது அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டும். அப்படியானால் ஜூஸ் குடிக்கவே கூடாதா? என்றால், இந்த பிரச்சனை இருப்பவர்கள் மட்டும் ஜூஸை லைட்டாக சூடுபடுத்தி குடிக்கவும்.