ஈக்வடாரில் கஞ்சா பயன்படுத்த அனுமதிக்குமாறு கோரி நடத்தப்பட்ட பேரணி
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் கஞ்சா பயன்படுத்துவது குற்றமல்ல என கூறி பேரணி நடத்தப்பட்டுள்ளது.
அதற்காக சட்டம் இயற்ற வலியுறுத்தி நடைபெற்ற பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதன்மூலம் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு கஞ்சா விற்கப்படுவது தடுக்கப்படுவதுடன், போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் வருவாய் ஈட்டுவதும் முடக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவ பயன்பாட்டுக்காக கஞ்சா வளர்க்க 2019-இல் ஈக்வடார் அரசு அனுமதி வழங்கியிருந்தது.
இந்த நிலையில், 50 சதுர மீட்டர் பரப்பளவுவரை கஞ்சா வளர்க்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை வைக்கின்றனர்.
(Visited 18 times, 1 visits today)





