பயங்கரவாத குற்றச்சாட்டுகளில் துனிசிய முன்னாள் பிரதமருக்கு 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை

வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு துனிசியா. அந்நாட்டின் பிரதமராக 2013 முதல் 2014 வரை பதவி வகித்தவர் அலி லராயோத். இவர் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக 2022ம் ஆண்டு அலி லராயோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிரியாவில் போரிடம் துனிசியாவில் இருந்து ஆயுதக்குழுவினரை அனுப்பி வைத்ததாக அலி லராயோத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் அலி லராயோத் குற்றவாளி என்று கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. அதேவேளை, எதிர்க்கட்சியின் குரலை நசுக்கவே அலி லராயோத் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும், தற்போதைய அதிபர் கயிஸ் சையது எதிர்க்கடைகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)