அதிகமான இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 887,389 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அத்துடன், ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து 28 ஆம் திகதிவரை 165,113 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.
இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதுடன் அவர்களின் எண்ணிக்கை 35, 886 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், பிரித்தானியாவில் இருந்து 16, 833 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 12, 925 சுற்றுலாப் பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 11, 262 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
(Visited 2 times, 1 visits today)