ஜனாதிபதி டிரம்ப் மீது கடும் அதிருப்த்தியில் அமெரிக்கர்கள் – ஏழு தசாப்தங்களில் இதுவே முதல்முறை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தின் முதல் 100 நாட்களில் அவரது செயல்திறன் குறித்த அமெரிக்கர்களின் கருத்துக்கள் மிகவும் எதிர்மறையாக மாறியுள்ளதாக ஒரு கருத்துக் கணிப்பு கண்டறிந்துள்ளது.
அதன்படி, கணக்கெடுக்கப்பட்ட அமெரிக்கர்களில் 41 சதவீதம் பேர் மட்டுமே டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தின் முதல் 100 நாட்களில் அவரது செயல்திறனை ஆதரித்துள்ளனர்.
கடந்த ஏழு தசாப்தங்களில் ஒரு அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்ற முதல் 100 நாட்களில் அடைந்த மிகக் குறைந்த புகழ் மதிப்பீடு இதுவாம்.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பொருளாதாரத்தை கையாளும் விதத்தை 61 சதவீதம் பேர் ஏற்கவில்லை என்றும் இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
இதில் டிரம்பின் வரிக் கொள்கை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகச் செய்திகள் வெளிப்படுத்தின.
அவர் நிர்வாக அதிகாரங்களைப் பயன்படுத்தும் விதமும், பொது அதிகாரிகளைக் கையாளும் விதமும் டொனால்ட் டிரம்பின் புகழ் குறைய வழிவகுத்ததாகவும் அந்த அறிக்கைகள் கூறுகின்றன.