தினசரி பயன்படுத்தும் பல பொருட்களில் ஆபத்தான இரசாயனங்கள் – மக்களுக்கு எச்சரிக்கை
தினசரி பயன்படுத்தப்படும் 100க்கும் அதிகமான பொருள்களில் ஆபத்தான இரசாயனங்கள் இருப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
சவர்க்காரம், ஷெம்போ எனும் முடியைக் கழுவும் திரவம் முதல் பாத்திரம் கழுவும் திரவம், சலவைக்குப் பயன்படுத்தப்படும் சவர்க்காரம் வரையிலான பொருள்களில் இரசாயனம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Environmental Science & Technology சஞ்சிகையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டது.
அமெரிக்காவின் California பல்கலைக்கழகம், Silent Spring Institute எனும் சுகாதார ஆய்வு அமைப்பு ஆகியவை California மாநிலத்தின் தகவல் தளங்களை ஆராய்ந்தன.
குறிப்பாக, காற்றில் எளிதில் வெளியாகக்கூடிய ரசாயனங்கள் (volatile organic compounds), புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்கள் கொண்ட பொருள்கள் அடையாளம் காணப்பட்டன.
வழக்கமாகப் பயன்படுத்தப்படும் பொருள்களில் உள்ள ரசாயனங்களுடன் மக்கள் பல முறை தொடர்பில் வருகின்றனர் என்று ஆய்வாளர்கள் கூறினர்.
அடையாளம் காணப்பட்ட பொருள்களில் பெரும்பாலானவை வீட்டில் வழக்கமாகப் பயன்படுத்தக்கூடியவை என்று The New York Times செய்தி நிறுவனம் சொன்னது.
கிட்டத்தட்ட ஒவ்வொரு பொருளிலும் volatile organic compounds உள்ளதாகக் கூறப்பட்டது. அவை நறுமணத்துக்காகப் பயன்படுத்தப்படுவதுண்டு.
அத்தகைய ராசயனங்கள் பிள்ளைகளையும் கர்ப்பிணிகளையும் எளிதில் பாதிக்கலாம். நறுமணம் இல்லாத பொருள்களை மக்கள் நாடலாம் என்று ஆய்வாளர்கள் பரிந்துரைத்தனர்.