ஐரோப்பா

பிரான்ஸில் அச்சுறுத்தலாக மாறிய சிறுவர்கள் – சுற்றிவளைத்த பொலிஸார்

பிரான்ஸில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட சிறுவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

antes-la-Jolie (Yvelines) நகர பொலிஸாரால் குறித்த சிறுவர்கள் கைது செய்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி மார்ச் மாதங்களில் Yvelines மாவட்டத்தின் பல்வேறு நகரங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய 12 தொடக்கம் 16 வயதுடைய சிறுவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அங்குள்ள சிகரெட் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், தொலைபேசி விற்பனை நிலையங்கள் போன்ற இடங்களில் கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளனர். மொத்தமாக 6 கொள்ளைகளில் அவர்களுக்கு தொடர்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கமராக்களில் சிக்கிய காட்சிகளை அடிப்படையாக கொண்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக ஐந்து சிறுவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், மூவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!