இலங்கை பல்வேறு வைரஸ்கள் அச்சுறுத்தும் அபாயம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் கொவிட்-19 வைரஸ் உட்பட பல்வேறு வகையான வைரஸ்கள் பரவுவதற்கான அபாயம் உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தடுப்பதற்கு, முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதாரப் பரிந்துரைகளை, மக்கள் உரிய வகையில் பின்பற்ற வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று அறிவித்துள்ளது.
தற்போது, கணிசமான எண்ணிக்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர்.
அத்துடன் இறப்புகளும் பதிவாவதால் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் பல வைரஸ் தொற்றுகள் சமூகத்தில் பரவலடைந்து வருகின்றன.
இதனை கவனத்தில் கொள்ளவில்லை எனில், பாரிய அழிவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.
எனவே, முன்னதாக அறிவிக்கப்பட்டவாறு, முகமூடிகளை அணிதல், கைகளை சுத்தமாக கழுவுதல், பொதுக் கூட்டங்களைத் தவிர்த்தல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவதால் அதில் உள்ள பாதிப்புகளில் இருந்து விடுபட முடியும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொதுமக்களை கோரியுள்ளது.