இலங்கையின் பல பகுதிகளில் 100 மி.மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு!

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (25) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சில இடங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் மிதமானது முதல் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)