அமெரிக்க விமானத்தில் மருத்துவ உதவி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் : பரிதாபமாக பறிபோன உயிர்!

அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவருக்கு மருத்துவ அவசர நிலை எழுந்த நிலையில், அவருக்கு உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும், இந்நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விமானத்தில் பறக்கத் தகுதியற்ற ஒரு பயணியை இணைப்பு விமானத்தில் தொடர்ந்து பயணிக்க அனுமதித்ததாக விமான நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கென்டக்கியைச் சேர்ந்த 62 வயதான ஜான் வில்லியம் கேனன், கொலராடோவிற்குச் செல்லும் பயணத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் அங்கு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் விமான நிறுவனம் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இறந்தவரின் குடும்பத்தினரால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)