பிரித்தானியாவில் அமுலுக்கு வரும் நடவடிக்கை : £60,000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை!

பிரித்தானியாவில் மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் கத்தி குத்து தாக்குதல்கள் சம்பந்தமான பதிவுகளை அகற்றவில்லை என்றால் £60,000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் 48 மணிநேர எச்சரிக்கையைத் தொடர்ந்து, விளம்பரப் பொருட்களையோ அல்லது கத்திகளைப் புகழ்ந்துரைக்கும் பொருட்களையோ அகற்றத் தவறினால், தனிப்பட்ட தொழில்நுட்ப நிர்வாகிகளுக்கு £10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கத்தி குற்றம் தொடர்பான ஒவ்வொரு பதிவிற்கும் தொழில்நுட்ப தளங்களும் அவற்றின் நிர்வாகிகளும் கூட்டாக £70,000 வரை அபராதம் விதிக்க நேரிடும், புதிய சட்டங்கள் ஆன்லைன் தேடுபொறிகள் மற்றும் சமூக ஊடக தளங்கள் மற்றும் சந்தைகளுக்குப் பொருந்தும்.
இளைஞர்கள் ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் பார்க்கும் உள்ளடக்கம் “அருவருப்பானது” என்று வல் துறை அமைச்சர் டேம் டயானா ஜான்சன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.