புனித பேதுரு பேராலயத்தில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் தேகம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் தேகம் இன்றைய தினம் வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்திற்குக் கொண்டுவரப்படவுள்ளதாக வத்திக்கான் திருச்சபை அறிவித்துள்ளது.
தற்சமயம் பாப்பரசரின் தேகம் காசா சண்டா மார்தா இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது இறுதிச் சடங்கு எதிர்வரும் சனிக்கிழமை ரோமில் உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்காவில் நடைபெறவுள்ளது.
நேற்றுமுன்தினம் (21) வத்திக்கான் நேரப்படி காலை 7:35 அளவில் தமது உத்தியோகபூர்வ இல்லத்தில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார்.
பக்கவாதம் மற்றும் மாரடைப்பு காரணமாக அவர் காலமானதாக வத்திக்கானின் வைத்தியர்கள் நேற்று உறுதிப்படுத்தியிருந்தனர்.
பல உலக நாடுகளின் தலைவர்கள் பரிசுத்த பாப்பரசருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தருவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 3 times, 3 visits today)