இலங்கை மின்சார சபை வெளியிட்ட அறிவிப்பு

வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின் மின்கலங்களை குறுஞ்செய்தி வந்தால் மட்டுமே இன்றைய தினம் செயலிழக்கச் செய்யுமாறு இலங்கை மின்சார சபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
21 ஆம் திகதி வரை குறுஞ்செய்தி மூலம் மட்டும் சூரிய மின் மின்கலங்களை செயலிழக்கச் செய்தால் போதுமானது என மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்சார அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும் விநியோகத்தை நிர்வகிக்கவும், தினமும் நண்பகல் முதல் பிற்பகல் 3 மணி வரை கூரை சூரிய மின்கலங்களை செயலிழக்கச் செய்யுமாறு இலங்கை மின்சார சபை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
(Visited 3 times, 3 visits today)