இலங்கையில் 20 நாட்களில் 16 கொரோனா மரணங்கள்! சுகாதார பிரிவினர் எச்சரிக்கை

இலங்கையில் கடந்த 20 நாட்களில் 16 கொவிட்-19 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 27ஆம் திகதி கொரோனா நோயால் ஒரு மரணம், அதே மாதம் 23ஆம் திகதி ஒரு மரணம், மே 1ஆம் திகதி ஒரு மரணம் மற்றும் மே 5ஆம் திகதி மேலும் மூன்று மரணங்களும் இவற்றில் உள்ளடங்குவதாக தொற்றுநோயியல் துறை மேலும் கூறுகிறது.
இதேவேளை, கடந்த 8ஆம், 9ஆம் திகதிகளில் இரு மரணங்களும், 11ஆம் திகதி மேலும் இரண்டு மரணங்களும், 12ஆம் திகதி இரண்டு மரணங்களும், 14ஆம் திகதி ஒரு மரணமும் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
(Visited 16 times, 1 visits today)