வட அமெரிக்கா

‘வேறு வழியில்லை’: 90 நாட்களில் 90 வர்த்தக ஒப்பந்தங்களை எட்ட US இலக்கு – நிபுணர்கள் சந்தேகம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது வரி விதிப்பை பெரும்பாலான நாடுகளுக்கு எதிராக 90 நாள்களுக்கு நிறுத்திவைத்துள்ளார்.அந்த 90 நாள்களுக்குள் 90 வர்த்தக ஒப்பந்தங்களை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் தற்பொழுது அமெரிக்க அதிகாரிகள் உள்ளனர். ஆனால், இதில் உள்ள சவால்கள் வெகு சீக்கிரமே தெரியவந்துள்ளாகக் கூறப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகத் தலைவர் மார்கோஸ் செவ்கோவிச் திங்கட்கிழமை (ஏப்ரல் 14ஆம் தேதி) வர்த்தக உடன்பாடு தொடர்பாக அவசர கதியில் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா வருகிறார். அமெரிக்காவுடன் இருவழி வர்த்தகமாக கடந்த 2024ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 1 டிரில்லியன் அளவுக்கு வர்த்தகம் செய்துள்ளது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் என்பது நினைவுகூரத்தக்கது. ஆனால், அவர் வரும் சமயம் டிரம்ப்பால் வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் அர்ஜெண்டினா அறிவிக்க உள்ள பொருளியல் சீர்திருத்த நடவடிக்கைகள் நிகழ்ச்சிக்காக அங்கு சென்றுள்ளார்.

பெசன்ட் இல்லாத சமயத்தில் அனைத்து நாடுகளுடனான வர்த்தக உடன்பாடுகளையும் 90 நாள்களுக்குள் முடிப்பது எப்படி சாத்தியமாகும் என்று பல வர்த்தக வல்லுநர்கள் வியப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

“வர்த்தக முடிவுகளை எடுப்பதற்கு முக்கியமான பேச்சுவார்த்தைகள் அவசியம். இதை எப்படி இந்தக் காலக்கெடுவுக்குள் முடிப்பது,” என்று வினவுகிறார் ஆசிய சமூக கொள்கை ஆய்வுக் கழக தலைமை வர்த்தகப் பிரதிநிதி வெண்டி கட்லர். முழுமையான உடன்பாடுகளை நாடுகளுடன் எட்டுவதற்கு இந்தக் காலகட்டம் போதவே போதாது என்று இவர் தெரிவிக்கிறார்.

இதற்கு பதில் கொடுக்கும் விதத்தில் ஃபாக்ஸ் பிஸ்னஸ் நெட்வொர்க் ஊடக நேர்காணல் நிகழ்வில் பங்கேற்ற அமெரிக்க அரசின் வர்த்தக ஆலோசகர், பீட்டர் நவாரோ, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரியர், வர்த்தக அமைச்சர் ஹாவர்ட் லிங்க் ஆகியோரால் 90 நாள்களுக்குள் இதற்கான ஒப்பந்தங்களை கையாள முடியும் என்று கூறியுள்ளார்.ஆகவே, 90 நாள்களுக்குள் 90 உடன்பாடுகள் எட்டக்கூடியதே, என்று நவாரோ ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

முடிவாக அவர், “இவை எல்லாவற்றிலும் டிரம்ப்தான் பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்குகிறார். அவர் உன்னிப்பாக அனைத்தையும் கவனத்தில் கொள்ளாமல் எதுவும் நடக்கப்போவதில்லை,” என்று கூறினார்

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!